மதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் என்றுமே ஏழாம்
பொருத்தம்தான்,மதம் சொல்வதை விஞ்ஞானம் நம்பாது,விஞ்ஞானம் சொல்வதை மதம்
ஏற்காது.பகுத்தறிவு வளர்ச்சியடைந்த(ஓரளவிற்கு) இந்த காலத்திலேயே இப்படி என்றால் 370 வருஷத்திற்கு
முன்னால் சொல்லவாவேண்டும்.அப்படி உண்மையாக இருந்தும்கூட மத ஆதிக்கத்தின் முன் அறிவியல்
மண்டியிட்ட ஒரு சம்பவத்தை தான் நாம் இப்போது பார்க்கபோகிறோம்.
கலிலியோ...நவீனவானியல் ஆய்வுகளின் தந்தை...இத்தாலியில்
பிறந்த இயற்பியலாளர், வானியல்வல்லுநர், தத்துவஞானி.வானியல்
துறையில் பல புரட்சிகள் செய்தவர்.அறிவியல் அறிஞர் கோபர்நிக்கஸ் கூறிய “சூரியனே
மையபுள்ளி,அதை சுற்றியே மற்ற கோள்கள் இயங்குகின்றது” என்ற தத்துவத்தை அடிப்படையாக
கொண்டு கலிலியோ எழுதிய புத்தகம் தான் “Dialogue Concerning the Two Chief World
Systems”.இந்த புத்தகத்தில் “சூரியன் பூமியை சுற்றவில்லை,பூமியும்
பிற கோள்களும் தான் சூரியனை மையமாக வைத்து சுற்றி வருகின்றன” என்று பல
விளக்கங்களுடன் விவரித்திருந்தார்.விவகாரம் இங்கு தான் ஆரம்பித்தது.அப்போதைய
கத்தோலிக்க கிறுத்துவ சபை இதை ஏற்கவில்லை,மேலும் இப்படி சொல்வது மத புனிதத்தை
கெடுக்கும் செயல் என்றும்,மத குற்றம் என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு
தொடரப்பட்டது.
இதனால் கலிலியோ இத்தாலியிலிருந்து வாடிகன் நகருக்கு அழைத்துவரப்பட்டார்.1633 ம் ஆண்டு ஜூன் மாதம் கத்தோலிக்க கிறித்துவ சபையில் வழக்கு நடந்தது.அப்போதைய போப் அர்பன் VIII ன் முன்னால் கலிலியோ நிறுத்தப்பட்டார்.கலிலியோ தன் தரப்பு நியாங்களையும் அறிவியல் பூர்வமான விளக்கங்களையும் எவ்வளவோ எடுத்துக்கூறினார்.ஹுஹும்,பலன் இல்லை.இறுதில் தீர்ப்பு கலிலியோவிற்கு எதிராகவே அமைந்தது.
அதாவது மத புனிதத்தை அசுத்தப்படுத்தியதர்க்கும்,மக்கள்
நம்பிக்கையை குலைக்க முயன்றதற்கும் சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது.அதோட
விட்டாங்களா,பூமி சூரியனை சுற்ற வில்லை,சூரியன் தான் பூமியை சுற்றுகிறது என்று
சபையில் உரக்க சொல்லவேண்டும்,அப்படி சொல்லும்வரை சவக்கடி தண்டை தந்தனர்.தண்டனை
ஆரம்பிக்கப்பட்டது,ஒன்று,இரண்டு,மூன்று என்று சவுக்கடிகள்விழ ஆரம்பித்தது.
ஓர் அறிவியல் அறிஞருக்கு உலக உண்மையை எப்படி மாற்றி சொல்ல மனம் வரும்.சொல்லமாட்டேன் என்று மறுத்தார்.மேலும் மேலும் சவுக்கடிகள் விழ ஆரம்பித்தன,அந்த எழுபது வயது கலிலியோவால் இதற்கு மேல் அடிகளை தாங்கிக்கொள்ள வலிமையில்லை,உடலும் மனமும் ஒருசேர தளர்ந்த நிலையில் “ஆமாம் ஆமாம்,பூமி சூரியனை சுற்ற வில்லை,சூரியன் தான் பூமியை சுற்றுகிறது” என்று உரக்க கத்தி மயங்கி கீழேவிழுந்தார்.மயக்க நிலையில் தனக்கு தானே மெதுவாக சொல்லிக்கொண்டாராம் “இல்லை இல்லை, பூமி தான் சூரியனை சுற்றுகிறது”.
குறிப்பு: 350 ஆண்டுகளுக்கு பிறகு 1922 ல் அதே
வாடிகன் கத்தோலிக்க சபையில் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுகிறது.வழக்கின்
முடிவில் போப் ஜான் பால் II சொன்ன தீர்ப்பு இதுதான்: ”கலிலியோ சொன்னது தான்
சரி,அன்றைய தீர்ப்பு தவறானதாகும்,இதற்காக இந்த சபை வருத்தம் தெரிவிக்கிறது”
“அறிவியலின் வாழ்வுதனை சூது கவ்வும்,அறிவியல் மறுபடியும் வெல்லும்”
--மணி மாணிக்கம்.

