Tuesday, July 26, 2016

ஒரு பாடலின் பரிணாம வளர்ச்சி!


இந்தப் பாட்டை எங்கோ கேட்ட மாதிரி இருக்கேன்னு இப்போ யாராவது சொன்ன கொரியன் பட காப்பினு அசால்ட்ட சொல்லிடுறாங்க. (பாட்டும் மா?!) =))

அதுக்கும் காரணம் இல்லாம இல்ல. இதைப் பாருங்க.



அப்படித்தான் ஒரு நாள் கூத்து படத்தின் "எப்போ வருவாரோ" பாடலை எங்கோ கேட்ட மாதிரி இருக்கேன்னு யோசிச்சா பல பேர் பல விதமா பாடி இருக்காங்க! (same song. different versions. Not copy).
ஏன்? யார் இந்த பாடலை எழுதியது என்று பார்த்தால் பின்னாடி ஒரு பெரிய வரலாறே இருக்கு!

கோபாலகிருஷ்ண பாரதி அவர்கள், நந்தனார் சரித்திர கீர்த்தனைகளுக்காக எழுதிய பாடல்தான் "எப்போ வருவாரோ" .
நந்தனார் சரித்திரமா! நந்தனார் யாரு?
63  நாயன்மார்கள்ல ஒருத்தர். பெரிய புராணதுல இருப்பாரே..
பெரிய புராணமா? சேக்கிழார் எழுதியது.
சேக்கிழாரா? இரண்டாம் குலோத்துங்கச்சோழனின் அமைச்சர். அமைச்சர்க்கு எதற்கு இந்த வேலை?

கொஞ்சம் பிளாஷ்பேக்!

நந்தனார். (6th to 8th century)
தமிழ் நாட்டில் வாழ்த்த  சிறந்த சிவனடியார்கள்  63  நாயன்மார்கள்.  அதுல ஒருத்தர் நந்தனார்.  இவருடைய மற்றொருப் பெயர் "திருநாளைப்போவர்".
நந்தனார்க்கு சிவன்னா உயிர். ஆனா அவருடைய  சாதி காரணமாக அந்த காலத்துல அவர கோவிலுக்குள்ள விடவே மாட்டங்க. அவரும் கோவிலுக்கு வெளில இருந்தே சிவனை மனதால் பார்த்து காதல்ல விழுந்துட்டார்.  நந்தனார் வரும்போதுதெல்லாம்  சிவனை வெளில இருந்தே  பார்க்க வசதியாக நந்தி பகவானும்  வழி விட்டு நிப்பாரு. நந்தனாரும் கோவிலுக்கு வெளில இருத்தே  சிவபக்திப் பாடல்களை பரவசமாகப் பாடி திருப்திபட்டுக்கிட்டாரு.

ஒருநாள் நந்தனார்க்கு தில்லை அம்பல நடராஜரை கண்குளிர அருகில் நின்று தரிசிக்க ஆசை வந்துச்சு. அந்த ஆசை, பேராசையாகி அவரை தூங்கக்கூட விடல. என்னைக்குமே ஆசைக்கும் பேராசைக்கும் நடக்குற போரில ஜெயிகுறது பேராசைதான! :P நாளைக்கு தில்லைக்குப் போறோம். கோவில்க்குள்ள போறோம். சிவனை சேவிக்கிறோம். அப்படின்னு தனக்குத்தானே சொல்லிட்டு இரவு உறங்கப்போனரு. காலைல எழுத்திதவுடனே, இந்த மேல்சாதி காரங்க நம்மளை கோவிலுக்குள்ளே விட மாட்டங்களே என்ன பண்றதுன்னு யோசிச்சு, சரி இன்னிக்கு வேண்டாம். நாளைப் போவோம், அப்படின்னு முடிவேடுத்தாரு. Engineering student examக்குப் படிக்கிற மாதிரி தினமும் நாளைப் போவோம், நாளைப் போவோம்னு தள்ளிப் போட்டுகிட்டே இருந்தார்.  இதனாலத்தான் இவருக்கு இன்னொருப் பெயர் "திருநாளைப்போவார்"!
சிவனும் நந்தனார் இன்னிக்கு வருவாரு.. நாளைக்கு வருவாருன்னு காத்திருந்து காத்திருந்து கடைசில கடுப்பாகி கோவில் குருக்கள் கனவுல வந்து, "இந்த மாதிரி என்ற பக்தன் இருக்கான். அவரை சாதியை காரணமா காட்டி  தடுக்கமா கோவிலுக்குள்ளே உள்ள அழைச்சிட்டு வாங்க. இதுவே என் கட்டளை. அதுவே சாசனம்!" அப்படின்னு சொல்லிட்டாரு. கோவில் குருக்களும் பயந்து போய் நந்தனாரை கோவிலுக்கு அழைச்சிட்டு வந்தார். நந்தனார் பத்திப்பரவசமாகி பலபல அருமையான பாடல்களால் சிவனை பாடிக்கொண்டே வந்தார். சிவ லிங்கத்துக்கு அருகில் வந்ததும், திருவிளையாடல் படத்துல சிவாஜிகணேசன் மறைகிற மாதிரி சிவனோடு சிவமாக மறைந்தார். சுற்றி நின்ற குருக்கள் அனைவரும் அதிர்ச்சியில் அம்னிசியா வந்த மாதிரி உறைந்து போனார்கள். "சாதிகள் இல்லையடி பாப்பானு" சொல்ல சிவபெருமான் நடத்திய நாடகம்.



சேக்கிழார் (12th century)
சேக்கிழார் ஒரு சிறந்தப் புலவர்.  இரண்டாம் குலோத்துங்கச்சோழன் இவரது புலமையை மெச்சி தனது அமைச்சராக சேர்த்துக் கொண்டார்.
ஒரு நாள் குலோத்துங்கச்சோழன் சீவகசிந்தாமணி  (சமண)பாடல்களைப் படித்து, "ஆஹா ஓஹா.. என்ன lyricsயா"னு சேக்கிழார்க்கு Share பண்ணி இருக்காரு. சேக்கிழார் கடுப்பாகி (பொறாமை) இது எல்லாம் என்ன பாடல், எம்பெருமான் சிவனைப்பாடும் சைவ சமய பாடல்கள் கேட்டுப்பாருங்க. அதெல்லாம் தாறுமாறுனு reply பண்ணிருக்காரு. குலோத்துங்கச்சோழன் impress ஆகி "ஊரில உள்ள எல்லா சைவ சமய பாடல்களையும் தொகுத்து வா. நாம கலக்கிறோம்"னு சொன்னாரு. சேக்கிழாரும் அவ்வாறே கிளம்பி அதே தில்லை கோவிலுக்குச் சென்று வழிப்பட்டு வேலையை ஆரம்பிக்கும்போது சிவபெருமான் "உலகெல்லாம்" என முதல் அடி எடுத்துக்கொடுக்க , 63  நாயன்மார்களின் இனிமையான பாடல்களைத் தொகுத்து (இதில் நந்தனார் சரித்திரமும் அடக்கம்) இறுதியாக தனது பாடல்களையும் சேர்த்து "பெரியபுராணம்" என வெளியிட்டார்.

கோபாலகிருஷ்ண பாரதி (18th century)
இசைத்தமிழில் வல்லவர் கோபாலகிருஷ்ண பாரதி. இவருக்கு இசை வெகு இயல்பாக கை வந்தது. தானே பாடல்களை இயற்றி மெட்டுப்போட்டு பாடுவதில் வல்லவர். அக்காலகட்டத்தில் கர்நாடக இசையை எளிமையான அழகுத்தமிழோடு அனைத்து தரப்பினர்களும் விரும்பும் வண்ணம் கொண்டு சேர்த்ததில் இவரின் பங்கு முக்கியமானது. அந்தக் காலத்து அனிருத்+தனுஷ்ன் ஒரே வடிவம்' அவர். இல்ல.. இல்ல.. அதுக்கும் மேல!

இப்படி இருக்கும்போது ஒருநாள், காரைக்கால் (வெள்ளைக்கார) அரசு அலுவலத்தில், எப்பொழுதும் உற்சாகமாக இருக்கும் ஊழியர்கள் அன்று தூக்க கலக்கமாக இருந்தார்கள். அவர்களது பிரெஞ்ச் மேலதிகாரி சீஸ்துரை இதனை கவனித்தார். மறுநாளும் அந்த ஊழியர்கள் அனைவரும் ரொம்ப அசதியாக தூங்கி தூங்கி விழுந்தாங்க. வெள்ளைக்கார கவர்ன்மென்ட் ஆபீஸ்லேயே நம்மாளுங்க தூங்கி சாதனை படைச்சாங்க :P அதற்கு மறுநாளும் இதே கதை. சீஸ்துரை கடுப்பாகி "நானும் பாத்துகிட்டே இருக்கேன். ஆபீஸ் வந்து தூங்குவதே உங்களுக்கு வேலையாகிடுச்சு. என்னதான்யா உங்க பிரச்னை?" அப்படின்னு என்குயரி வைத்தாரு. நம்மாளுங்க, "ஐயா இந்த மாதிரி பக்கத்து ஊர் நாகப்பட்டினதில ஒரு வாரமா கோபாலகிருஷ்ணரோட நந்தனார் சரித்திர கச்சேரி. அவர் பாடலுக்கு நாங்க அடிமைகள்.  அதான் இரவெல்லாம் கண்ணு முழிச்சு காது நிரம்ப கேட்டதால ஆபீஸ்ல தூங்கிட்டோம். மன்னிச்சு"னு சொல்லி இருகாங்க. சீஸ்துரைக்கு நம்பிக்கை வராம, "நாளைக்கு என்னயையும் அவரோட கச்சேரிக்கு கூட்டிட்டுப்போ, அவர் என்ன அவ்ளோ பெரிய அப்பாடகரானு பார்த்துடுறேன்"னு சொல்லி கிளம்பிட்டாரு.

மறுநாள்! கோபாலகிருஷ்ண பாரதி அவர்கள் நந்தனார் சரித்திரத்தை இனிமையான அழகுத்தமிழோடு பாட பாட கூட்டம் அப்படியே சொக்கிப்போகுது. சீஸ்துரை, அவருக்கு தெரிந்த அரைகுறை தமிழுக்கே மெர்சலாகிடுறாரு!
கச்சேரி முடிந்ததும் கோபாலகிருஷ்ணரை கட்டிப்பிடித்து, "உங்களுடைய இந்த படைப்பை நாம அச்சுப் பிரதியாக ரிலிஸ் பண்றோம்ஜி"னு சொல்லி.. சொன்னதை செய்தும் காட்டினார் சீஸ்துரை. அக்காலகட்டத்தில் printed bookலாம் ரொம்பப் பெரிய விஷயம். தமிழில் அச்சுப் பிரதியாக வெளியான இரண்டாவது இசை நாடகம் கோபாலகிருஷ்ண பாரதி அவர்களின் நந்தனார் சரித்திரம்.

2016ல் வெளியான "ஒரு நாள் கூத்து" படத்தின் இயக்குனர் இந்த நந்தனார் சரித்திரதில் உள்ள  "எப்போ வருவாரோ" பாடலைத்தான் சரியாக உபயோகத்திருப்பார். நெல்சன் பிரபாகரன்னின் அற்புதமான இசையில் ஹரிசரண் பாடிய அந்தப்பாடல் உங்களுக்காக.




 "எப்போ வருவாரோ" பாடல் தொகுப்பு (Playlist)
http://www.youtube.com/playlist?list=PLdzeiwBCeTSmez29pe-sjr-UWnSBlpTxe




பாடல் வரிகள்

எப்போ வருவாரோ.. எப்போ வருவாரோ.. 
எப்போ வருவாரோ.. எப்போ வருவாரோ.. 
எந்தன் கலி தீர எப்போவருவாரோ 
எப்போ வருவாரோ.. எப்போ வருவாரோ.. 
எப்போ வருவாரோ.. எப்போ வருவாரோ.. 
எந்தன் கலி தீர எப்போவருவாரோ 

அப்பர் முதல் மூவரும், 
ஆளுடையடிகளும்
செப்பிய தில்லை 
சிதம்பரனாதன் எப்போவருவாரோ!
நற்பருவம் வந்து நாதனைத் தேடும்
நற்பருவம் வந்து நாதனைத் தேடும்
நற்பருவம் வந்து நாதனைத் தேடும்
கற்பனைகள் முற்றக் காட்சி தந்தாரே
கற்பனைகள் முற்றக் காட்சி தந்தாரே
கற்பனைகள் முற்றக் காட்சி தந்தாரே

அற்பசுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்
அற்பசுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்
அற்பசுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்
பொற்பதத்தைக் காணேன், 
பொன்னம்பலவாணன்
பொற்பதத்தைக் காணேன், 
பொன்னம்பலவாணன்
பொற்பதத்தைக் காணேன், 
பொன்னம்பலவாணன்
கோபாலகிருஷ்ணன் போற்றிப் பணிந்திடும் ஈசன் மேலே
பாலகிருஷ்ணன் போற்றிப் பணிந்திடும் ஈசன் மேலே
காதல் கொண்டேன் வெளிப்படக் காணேன்!

எப்போ வருவாரோ.. எப்போ வருவாரோ.. 
எந்தன் கலி தீர எப்போவருவாரோ 

அப்பர் முதல் மூவரும், 
ஆளுடையடிகளும்
செப்பிய தில்லை 
சிதம்பரனாதன் எப்போவருவாரோ!

எப்போ வருவார்னுதான் தெரியல!

- பாலா

You may also like this post


Close [x]