ஐரோப்பா முழுவதும் சிறு சிறு கூட்டமாக பரவி வேரூன்றிய யூதர்கள் தங்களது அறிவாலும் முயற்சியாலும் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியடைந்தனர்.ஆனால் ஒன்றை அவர்கள் மறந்தே போய்விட்டார்கள்,அது தான் அவர்களது புராதன மொழியாகிய ஹீப்ரு.பல்வேறு நாடுகளில் குடியேறி,அங்கேயே பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்ததால் அந்தந்த வட்டார மொழியையே பேசி வந்தனர்.கிட்டத்தட்ட ஹீப்ரு அழிந்தேபோய்விட்டிருந்தது.ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்காசியாவில் பரவியிருந்த அனைத்து யூதர்களும் தொடர்பில் இருக்க ஒரு பொதுவான மொழி ஒன்று தேவை என்பதை கொஞ்சம் தாமதமாகவே உணர ஆரம்பித்தனர்.
புராணத்தில் இறந்தர்வர்கள் கூட மீண்டும் பிழைத்ததுண்டு,ஆனால் அழிந்து போன ஒரு மொழி மீண்டும் வழக்கத்திற்கு வந்ததாக எந்த ஒரு வரலாறும் இல்லை.இந்த சாதைனையை செய்து காட்டியவர்கள் யூதர்கள்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வழக்கொடிந்த மொழியை மீண்டும் தோண்டிஎடுத்தனர்.பழங்கால புத்தகங்கள்,புராணங்களை கொண்டு மீண்டும் ஹீப்ருவுக்கு உயிரூட்டினர்.'கில்லி' படத்துல ஒரு வசனம் வரும்,விஜய் த்ரிஷாவிடம் சொல்வார், "என்ன பொறுத்த வரைக்கும் எறங்கிட்டா ஜெய்க்கணும்,ஜெய்ச்சே ஆகணும்".இது யூதர்களுக்கு மிக சரியாக பொருந்தும்.இது சாத்தியமா முடியுமா என்றெல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை,அது தான் அவர்களின் குணம்.மெல்ல மெல்ல உயிர் பெற்று,எழுத்து வடிவம் பெற்று உலாவ தொடங்கியது ஹீப்ரூ.இன்று இஸ்ரேலில் தேசிய மொழியே ஹீப்ரூ தான்.
ஹீப்ரூ அவர்களது (அறிவு)போராட்ட வேகத்தை அதிகரித்தது.அதன் விழைவு தான் நில வங்கி திட்டம்.
நில வங்கி :
முதன் முதலில் வங்கி முறையை உலகிற்கு அறிமுகபடுத்திய பெருமை இவர்களையே சாரும்.இஸ்ரேலை உருவாக்கவேண்டுமானால் அந்த நாட்டில் பெரும்பான்மையான யூதர்கள் வேண்டும்,ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்காசியாவில் பரவியுள்ள யூதர்கள் வர தயார் தான்,ஆனால் தங்க வீடும்,வீடுகட்ட நிலமும் வேண்டுமல்லவா,என்ன செய்யலாம் என மூளையை குடைந்தனர்.பெரும் பணக்கார யூதர்கள் இணைந்து இஸ்ரேலில் வங்கியை தொடங்கினர்,நிலத்தின் மேல் லோன் கொடுக்க ஆரம்பித்தார்கள்,கடன் வாங்கவா ஆளில்லை,ஏகப்பட்ட மக்கள் தங்கள் நிலத்தை வைத்து கடன் வாங்கினர்(அப்போது இஸ்ரேலில் 95% கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்களே இருந்தனர்).ஒன்றுக்கும் உதவாத பாலைவன நிலத்திற்கு ஏன் இவர்கள் இவ்வளவு கடன் குடுக்கிறார்கள் என்றெல்லாம் அவர்கள் சிந்திக்காதது சோகம் தான்.வட்டி கணக்கெல்லாம் அந்த பாமர மக்களுக்கு புரியவில்லை,கடனை திருப்பி செலுத்த முடியாமல் நிலத்தை இழந்தனர்,மேலும் வங்கி தனியாக சும்மா கிடந்த நிலத்தையெல்லாம் விலைக்கு வாங்கியது,கால் இஞ்ச் நிலம் கிடைத்தாலும் விடவில்லை.இதன் மூலம் கிடைத்த நிலத்தையெல்லாம் யூதர்களுக்கு மட்டுமே விற்றனர்,மீண்டும் தங்கள் தேசத்திற்கு குடிபெயர ஆரம்பித்தனர்,அவர்களின் ஆனந்த கண்ணீரில் பாலைவனமும் சற்று ஈரமாகித்தான் போனது .2000 வருட கனவல்லவா இது .யூதர்களின் திட்டம் இது தான் என்று நிலத்தை விற்ற மக்களுக்கு தெரியும்போது அனைத்தும் கையைவிட்டு போயிருந்தது.
இஸ்ரேல் உதயம் :
பல போராட்டங்களை கடந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஆதரவுடன் மே 14,1948 அன்று இஸ்ரேல் உருவானது.யூதமக்களின் அறிவாலும் தொடர் முயற்சியாலும் கிடைத்த சுதந்திரத்தை நன்றாக பயன்படுத்தி இன்று இஸ்ரேலை வல்லரசாக உருவாக்கியுள்ளனர்.ஒருவேளை இவர்கள் ஆயுதத்தை மட்டுமே நம்பி போராடிஇருந்தால் யூத இனம் என்றோ அழிந்திருக்கும்,அவர்கள் பயன்படுத்தியது கத்தியுடன் புத்தியையும்,பொறுமையையும்.
குறிப்பு : எந்த ஒரு மதத்தையும் குறைகூற வேண்டும் என்றோ ,ஒரு மதத்தை உயர்த்தி கூற வேண்டும் என்றோ இந்த தொடரை நான் எழுதவில்லை.போராடி வென்ற ஒரு இனத்தின் உண்மை வரலாறே இது.ஆதலால் அதன் சம்பந்த பட்ட மொழி,நாடு,மதம் ஆகியவற்றை கூறுவது அவசியம் என்று கருதியே மதங்களின் பெயரை குறிப்பிடவேண்டியதாயிற்று.
இத்துடன் "கி.பி ஒன்று முதல் இன்று வரை" முடிவடைகின்றது.இதை படித்த அனைவருக்கும் எனது நன்றிகள் .
**எழுத்து: மணி மாணிக்கம் **