ஒரு இனம், தனக்காக ஒரு அரசு ,தனக்காக ஒரு மொழி ,ஒரு சுதந்திர நாடு இவற்றை அடைய கிட்டத்தட்ட 1900 ஆண்டுகள் போராடி வென்றுள்ளார்கள் என்றால் சற்று ஆச்சர்யமாகவே இருக்கும் ..அந்த அதிசய இனம் தான் யூதர்கள் (Hebrews ),அந்த சுதந்திர நாடுதான் இஸ்ரேல் .யூதர்கள் என்றாலே எதோ வெறுக்கக்கூடியவர்கள் என்பது போன்ற கசப்புணர்ச்சி இன்றும் பலர் மனதில் தோன்றுவதுண்டு .இதன் காரணத்தின் ஆணிவேரை அறிய வேண்டுமானால் 2013 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும் .
கி .பி ஒன்று:
அப்போது ஹெராத் என்ற யூத மன்னன் ஜெருசலத்தை ஆண்டுவந்தான்.அவன் பாட்டுக்கு ஜாலியாக ஆட்சி செய்து வந்தவனிடம் யூத குருமார்கள் சிலர் ஒரு அதிசய குழந்தையால் தங்கள் மணிமுடிக்கு ஆபத்து வரும் என்றும் ,அக்குழந்தை பின்னாளில் உலகை ஆளும் 'தலைவா' வாக மாறுவான் என்றும் பத்தவைத்தனர் .இதனால் பயந்த ஹெராத் மன்னன் ஒரு நல்ல நாளில் அந்த நகரில் இரண்டு வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் கொன்றான்.இங்கு தான் விதி விளையாடியது,அதாவது அந்த குறிப்பிட்ட குழந்தை மட்டும் எப்படியோ தப்பித்துவிட்டது.
அந்த குழந்தையின் பெயர் 'ஜோஷ்வா'..,'இயேசு' என்றால் சட்டென தெரியும்.அவனது பெற்றோர்கள் ஜோஸ்வாவை தூக்கிக்கொண்டு எகிப்துக்கு தப்பி சென்று விட்டனர்.பின் ஹெராத் இறந்த பின் தான் ஜெருசலத்திற்கு திரும்பினர்.அப்போது இயேசுவிற்கு வயது எட்டு.இயேசுவின் புதிய,மாறுபட்ட கருத்துக்கள்,அவரது சில மாய செயல்களால் அவரது புகழ் ஒரு புறம் பரவினாலும் மறு புறம் இவர் யூத மதத்தை அழிக்க வந்தவர் ,எதிரானவர் என்று யூதர்கள் மனதில் ஆழமாக பதிந்தது.இதனால் பல சூழ்ச்சிகள் செய்து பொய் குற்றம் சாட்டி அவருக்கு மரணதண்டனை அளித்தனர் யூத குருக்களும் பிலாத்து* மன்னனும்.அப்பொழுது இயேசுவிற்கு வயது 33.
இந்த ஒரு மரணம் தான் மொத்த ஐரோப்பிய ,மத்திய கிழக்காசிய நாடுகளில் அடுத்த 1900 ஆண்டுகள் யூதர்கள் படப்போகும் துயரங்களுக்கான விதை.'இறைவனால்
அருளப்பட்ட மதம்' என்ற பெயரிலிருந்து 'இயேசுவை கொன்ற மதம் ' என பெயர்பெற்ற யூதர்களின் நாடோடி வாழ்க்கை ,போராட்டம் ,இறுதியில் பெற்ற வெற்றி இவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.
* பிலாத்து கி .பி 26 முதல் கி .பி 36 வரை ரோமின்(Rome) மன்னராக ஆட்சி செய்து வந்தவர்.இவரது பெயர் இன்றும் வரலாற்றில் நிற்க ஒரே காரணம் இயேசுவிற்கு மரணதண்டனை அளித்ததனாலேதான்.
உண்மையில் இவர் தன் மனதார இந்த தீர்ப்பை இயேசுவிற்கு வழங்கவில்லை,யூத குருமார்களின் டார்ச்சர் அப்படி.(அரசனாகவே இருந்தாலும் யூத குருக்களின் முன் கப்சிப் என்று தான் இருக்கவேண்டுமாம்!).
* பிலாத்து கி .பி 26 முதல் கி .பி 36 வரை ரோமின்(Rome) மன்னராக ஆட்சி செய்து வந்தவர்.இவரது பெயர் இன்றும் வரலாற்றில் நிற்க ஒரே காரணம் இயேசுவிற்கு மரணதண்டனை அளித்ததனாலேதான்.
உண்மையில் இவர் தன் மனதார இந்த தீர்ப்பை இயேசுவிற்கு வழங்கவில்லை,யூத குருமார்களின் டார்ச்சர் அப்படி.(அரசனாகவே இருந்தாலும் யூத குருக்களின் முன் கப்சிப் என்று தான் இருக்கவேண்டுமாம்!).
இப்பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை Comment செய்யவும்.நன்றி.
*****எழுத்து: மணி மாணிக்கம்*****.


