கல்லறைக்குள் உலகம்: THE MUMMY (Part-1)-ன் தொடர்ச்சி
இரண்டாவது கதவை கண்டுபிடித்ததும் கார்ட்டருக்கு தனது இத்தனை ஆண்டு முயற்சி நிச்சயம் வெற்றிபெற்று விடும் என்று தோன்றியது..சிறிது நேரத்தில் சிறிய துளை ஒன்றை கதவில் ஏற்படுத்தினார்.சூடான காற்று அவர் முகத்தில் உள்ளிருந்து வீசியது.பிறகு அந்த கதவை திறந்து உள்ளே நுழைந்த கார்ட்டரின் கண்கள் அகல விரிந்தன.இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு சிறிது நேரம் தேவைபட்டது.ஒரு மியூசியமே வைக்கும் அளவிற்கு அந்த அறை பொக்கிஷங்களால் நிரப்பபட்டிருந்தது.தங்கம் மற்றும் யானை தந்ததால் செய்யபட்ட கிரிடம்,ஆசனம்,தங்க முலாம் பூசப்பட்ட ரதம்,மன்னரின் இரண்டு சிலைகள் என பல பொருட்கள் அந்த அறையில் இருந்தன.
இரண்டாவது கதவை கண்டுபிடித்ததும் கார்ட்டருக்கு தனது இத்தனை ஆண்டு முயற்சி நிச்சயம் வெற்றிபெற்று விடும் என்று தோன்றியது..சிறிது நேரத்தில் சிறிய துளை ஒன்றை கதவில் ஏற்படுத்தினார்.சூடான காற்று அவர் முகத்தில் உள்ளிருந்து வீசியது.பிறகு அந்த கதவை திறந்து உள்ளே நுழைந்த கார்ட்டரின் கண்கள் அகல விரிந்தன.இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு சிறிது நேரம் தேவைபட்டது.ஒரு மியூசியமே வைக்கும் அளவிற்கு அந்த அறை பொக்கிஷங்களால் நிரப்பபட்டிருந்தது.தங்கம் மற்றும் யானை தந்ததால் செய்யபட்ட கிரிடம்,ஆசனம்,தங்க முலாம் பூசப்பட்ட ரதம்,மன்னரின் இரண்டு சிலைகள் என பல பொருட்கள் அந்த அறையில் இருந்தன.
ஆனால் கார்ட்டர் எதிர்பார்த்த டூட் மன்னரின் உடலை மட்டும்
காணவில்லை (டுத்தாங்கமெனை
வரலாற்று ஆசிரியர்கள் ‘’டூட்’’ என செல்லமாக அழைக்கின்றனர்,நாமும் இனி அப்படியே
அழைப்போம்).
![]() |
| Tut's golden Throne and Ivory Perfume Tin |
அந்த
அறை முழுவதும் கார்ட்டரும் அவரது உதவியாளர்களும் தேடி பார்த்தும் டூட் மன்னரின்
உடலை கண்டுபிடிக்க முடியவில்லை,இதனால் அனைவருக்கும் பெரும் ஏமாற்றம்.இதற்கிடையில்
ஓர் துர்சம்பவம் ஒன்று நடந்தது.லக்கி பேர்ட்(Lucky Bird) எனப்படும் பாடும் பறவை
ஒன்றை கார்ட்டர் வளர்த்து வந்தார்.தான் எங்கு சென்றாலும் அதையும் உடன் எடுத்து
செல்வது வழக்கம்.அப்படிதான் இன்றும் அவருடன் அந்த அறையில் இருந்தது.அப்போது
எங்கிருந்தோ அங்கு வந்த ராஜ நாகம் ஒன்று அந்த பறவையை விழுங்கிவிட.,டூட் ஆவி தான்
உள்ளே வரவேண்டாம் என இப்படி எச்சரிததாகவும்,அறையினுள்ளே நூற்றுக்கணக்கான ராஜ
நாகங்கள் இருக்கலாம் என்றும் மறுநாள் தலைப்பு செய்தியாகவே பத்திரிக்கைகளில்
வந்துவிட்டது.பயந்து போன வேலையாட்கள் பலர் வேலையை விட்டே நின்றுவிட்டனர்.இதனால்
கார்ட்டர் புதிய ஆட்களை வரவழைத்து இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்கவேண்டியதாகிற்று.
மறுநாள்
மீண்டும் அந்த அறை சோதனையிடப்பட்டபோது மற்றொரு வாசல் தென்பட்டது..இன்னுமொரு
அறை.இந்த அறையில் மன்னர் அடுத்த ஜென்மத்தில் அவர் வாழ்வதற்கு தேவையான உடை,இசைகருவி,விளையாட்டு
பொருட்கள்,ஆயுதங்கள் உட்பட பல பொருட்கள் இருந்தன.அனைத்திலும் டூட் பெயர்
பொறிக்கபட்டிருந்தது (மறு ஜென்மத்தில் தன்னுடைய பெயரை அவர் மறந்துவிடுவாராம்,அதை
ஞாபகபடுத்த தான் அனைத்திலும் பெயர் பொரிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.)இதிலும்
மன்னரின் உடல் இல்லை.அந்த அறையை சலித்து எடுத்தனர்,
அப்போது சுவரின் ஒரு பகுதியில்
எதோ பூசப்பட்டது போன்று இருப்பதை கார்ட்டர் கண்டுபிடித்தார்.அந்த இடத்தில் ஒவ்வொரு
கல்லாக பெயர்த்து எடுத்தனர்.முதலில் தலையை மட்டும் நீட்டி உள்ளே எட்டி பார்த்த
கார்ட்டர்,பிறகு மெழுகுவர்த்தியுடன் தான் மட்டும் உள்ளே சென்றார்.சில நிமிடங்கள்
நிசப்தம் மட்டுமே நிலவியது.பிறகு உள்ளிருந்து கார்ட்டர் கத்தும் ஓசை மட்டும்
கேட்டது,பயத்தில் அல்ல,சந்தோஷத்தில்..இத்தனை ஆண்டுகள் எடுத்த முயற்சி
வெற்றியடைந்ததின் வெளிப்பாடு.இது தான் அனைவரும் எதிர்பார்த்த மன்னர் அடக்கம் செய்ய
பட்ட அறை.ஆனால் போன வேகத்தில் வெளியே வந்தார் கார்ட்டர்.
பிப்ரவரி17, 1923 ல் மக்கள் முன்னிலையில் டூட்டின் அடக்கம்
செய்யப்பட்ட அறை திறக்க பட்டது.அந்த அறையின் நுழைவு வாயிலில் “எனது கல்லறையை
மாசுபடுத்துபவர்கள் நைல் நதி முதலை
மற்றும் சிங்கத்திற்கு உணவாகுக” என்று எழுதப்பட்டிருந்தது.இதையெல்லாம்
கார்ட்டரும்,கார்நோவனும் சட்டை செய்யவில்லை,உள்ளே நுழைந்தனர்.அறையினுள்ளே 7
மீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்ட தங்க தகடால் மூடப்பட்ட மரபெட்டி ஒன்று
இருந்தது.மேலும் அங்கு டூட் மன்னர் கருஞ்சிறுத்தையின் மேல் சவாரி செய்வதுபோல் சிலை உட்பட பல பொக்கிஷங்கள் இருந்ததன.
பிறகு அந்த மரப்பெட்டியின் மேல் பாகம் திறக்கப்பட்டது,திறந்தவுடன்
உள்ளே மனித வடிவிலான கவசம் ஒன்று இருந்தது..அதை திறந்தால்
அதே போல் இன்னொன்று என 3 கவசத்திற்கு பின்னால் மம்மியாக்க பட்ட 19 வயதில் இறந்த டூட்
மன்னர் மீண்டும் இந்த உலகிற்கு வெளிப்பட்டார்..
இன்றைய டெக்னாலஜியையும்
மிஞ்சும் மம்மியாக்கப்படும் மருத்துவ முறை, 10 வயதிலேயே அரியணை,தன் சகோதரியையே திருமணம் செய்த டூட் மன்னரின் திருப்பங்கள் நிறைந்த
வாழ்க்கை வரலாறு அடுத்த பதிவில் தொடரும்..
**எழுத்து: மணி மாணிக்கம்**




